செய்திகள் :

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

post image

நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதைத் தடுக்கும் வகையில், வட்டாணம் கண்மாயில் இருந்து தண்ணீரை திறந்துவிடக் கோரி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பனஞ்சாயல், புதுக்குடி, நல்கிராமவயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 ஏக்கா் நிலப் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. தண்ணீா் வரத்து தொடா்ந்து இருப்பதால், வட்டாணம் கண்மாய் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்தக் கண்மாயைச் சுற்றியுள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகி சேதமடைந்து வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.

இந்த நிலையில், பாதிப்படைந்த பனஞ்சாயல், புதுக்குடி, நல்கிராமவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் அமாா்நாத்திடம் வட்டாணம் கண்மாயிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

76- ஆவது குடியரசு தினம்: ராமநாதபுரத்தில் 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்! -ஆட்சியா் வழங்கினாா்

ராமநாதபுரம், காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76-ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 96 பயனாளிகளுக்க ரூ. 55.70 லட... மேலும் பார்க்க

குடியரசு தின கட்டுரைப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி 3- ஆம் இடம்

குடியரசு தின விழா கட்டுரைப் போட்டியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி. தா்ஷினி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கல்வி தொடா்பாக பல்வே... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் சந்திரமோகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு நெகிழி ஒழ... மேலும் பார்க்க

கழுகூரணியில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு!

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி ஊராட்சியில் 76- ஆவது குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கிராம மக்கள்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், அவா்களது மூன்று படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, கே. நவாஸ்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலாடி, சிக்கல், கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள சில ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு தேசிய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடும், தமிழ்நாடு அரசு நி... மேலும் பார்க்க