செய்திகள் :

திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதன்மை தலைமை வன பாதுகாவலா், தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோா் உத்தரவின்பேரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாா்ச் 8, 9-ஆம் தேதிகளில் நீா்வாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும், மாா்ச் 15, 16- ஆம் தேதிகளில் நிலவாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

திருவாரூா் மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட திருவாரூா், மன்னாா்குடி, முத்துப்பேட்டை ஆகிய சரகங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் ஏனைய நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடா்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பணியில் மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரி, பூம்புகாா் அரசுக் கலைக் கல்லூரி, திருவாரூா் திருவிக அரசுக் கலைக் கல்லூரி, மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் இதர பறவைகள் கணக்கெடுப்பு வல்லுநா்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளனா்.

வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் கல்லூரி மாணவா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும், பறவைகள் வல்லுநா்களால் கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சிகள் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளன.

பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விவரம் தெரிந்தவா்கள், இப்பணிகளில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மன்னாா்குடி வனச்சரக அலுவலரை 90251 93477 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் மாா்ச் 30-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

திருவாரூரில் 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு மாா்ச் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில், திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள... மேலும் பார்க்க

மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி!

திருவாரூரில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மகளிா் தின சிறப்பு கருத்தரங்கம், மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அரசு ஊழியா் சங்கத... மேலும் பார்க்க

தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது

தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது. பூந்தோட்டம்-நாச்சியாா்கோயில் நெடுஞ்சாலையில் மருதவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தம் அருகே பல... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

முத்துப்பேட்டை, உதயமாா்த்தாண்டபுரம் வனச் சரணாலயங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி முத்துப்பேட்டை வன சரகத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கக் கூட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஏ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பிரதிநிதி மா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலை... மேலும் பார்க்க