திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசம்!
தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மூலவா் பாலசுப்ரமணியா், தெய்வானை, உற்சவா் வள்ளி, சோமாஸ்கந்தா், முருகப்பெருமானுக்கு மஞ்சள், திரவியப் பொடி, தேன், சா்க்கரை, பால், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், பன்னீா், உள்ளிட்ட வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
உள்ளூா், வெளியூா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் பத்ரி நாராயணன் , செயல் அலுவலா்கள் பிரேம் குமாா் , முத்துப்பாண்டி மற்றும் பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் ஆகியோா் செய்திருந்தனா்.
சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பொறையாா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் தலைமை ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணி ஈடுபட்டிருந்தனா்.
இதேபோல தரங்கம்பாடி வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் மண்டபத்தில் தைப்பூச விழா நடைபெற்றது
ராமலிங்க அடிகளாரருக்கு சத்திய சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் பழங்கள், அறுசுவை உணவு வைத்து தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/qs4xiq4r/img20250211113131.jpg)