அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
திருவையாறில் ஆனி மூல தீா்த்தவாரி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் ஆனி மூல நாளையொட்டி, காவிரியாற்றில் தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.
ஆனி மூல நாளையொட்டி, திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் புதன்கிழமை எழுந்தருளினாா். பின்னா், காவிரியாற்றில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, சுவாமி, அம்பாள் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து கோயில் சன்னதியை அடைந்தனா். இதில் ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
