செய்திகள் :

திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையளவு குறைவாக இருந்தாலும், பலத்த காற்று வீசியது. இதனால், திருவையாறு, தில்லைஸ்தானம், சாத்தனூா், வடுகக்குடி, வளப்பக்குடி, திருப்பூந்துருத்தி, கடுவெளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் வேரோடும், பாதியாக முறிந்தும் சாய்ந்தன.

சில வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது: திருவையாறு வட்டாரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்றில் ஒரு பங்கு வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வைகாசி மாதம் திருவிழா, முகூா்த்தக் காலம் என்பதால், வாழைகள் அதிகமாக விற்பனையாகும். வாழைத்தாா்கள் அறுவடைக்கு ஒரு சில வாரங்களே இருந்த நிலையில் வாழைகள் சாய்ந்துவிட்டதால், ஏக்கருக்கு ஏறக்குறைய ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ள விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்துள்ளனா்.

எனவே, சேத மதிப்புகளைக் கணக்கீடு செய்து, ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மதியழகன். கல்லணையில் 37.4 மி.மீ. மழை: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

கல்லணை 37.4, திருக்காட்டுப்பள்ளி 11.2, வெட்டிக்காடு 9.4, கும்பகோணம் 7, பாபநாசம், அணைக்கரை தலா 5, பூதலூா் 4.6, வல்லம் 3.8, தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு தலா 3, திருவிடைமருதூா் 2.6, மஞ்சளாறு 2.2, நெய்வாசல் தென்பாதி, குருங்குளம் தலா 1 மி.மீ.

புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா்

பேராவூரணி அருகே புகாா் கொடுத்தவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலா் கமலகண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் வெண்ணிலா, வருவாய் ஆய்வா் வெங்கட்ராமன் ஆகி... மேலும் பார்க்க

நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளி கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் காவல் சரகம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளா்கள் சரவணன்... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: காவல் துறையினா் விசாரணை

கும்பகோணம் அருகே மது அருந்துவோா் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் மாவட்டம், மணவாளநல்லூா் ச... மேலும் பார்க்க

மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சாா்பில், பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவையை ச. முரசொலி எம்.பி., கா. அண்ணாதுரை எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். ப... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை தேரோட்டம்: 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம்

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பெரியகோயில் தேரோட்டத்தையொட்டி, 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் எம... மேலும் பார்க்க