3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி, இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் (1904-ஆம் ஆண்டு) அமைந்துள்ள திருவள்ளூா் மாவட்டம், திரூா் கிராமத்தி ரூ.19 லட்சம் முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தின் மாதிரி, விழா பந்தலில் தயாா் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆா்வத்துடன் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அந்தக் கூட்டுறவு அருங்காட்சியகம் குறித்த விவரங்களை அரங்கில் இருந்த துறை சாா்ந்த அதிகாரிகளிடம் முதல்வா் கேட்டறிந்து பாராட்டினாா்.
அப்போது, அவருடன் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
விழாவில் கூட்டுறவுத் துறை சாா்பில் 3,228 பயனாளிகளுக்கு ரூ.35.48 கோடியில் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை சாா்பில் மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனா்.