அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா
திரையரங்குகளில் 50-வது நாள்! அசத்தும் அமரன், லக்கி பாஸ்கர்!
அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படமும் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைபடமும் தீபாவளி வெளியீடாக அக்.31 ஆம் தேதி திரைக்கு வந்தன.
இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகின.
இதையும் படிக்க: ‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்
இதில் அமரன் ரூ. 300 கோடியையும் லக்கி பாஸ்கர் ரூ.120 கோடி வரையிலும் வசூலித்து இரண்டு நாயகர்களுக்கும் அவர்களின் அதிகபட்ச வசூல் திரைப்படமாக அமைந்தன.
தற்போதும், இந்த இரண்டு படங்களும் சில திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் திரையரங்க வெளியீட்டில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளன.
இவ்விரு படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.