திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து 19 சவரன் திருட்டு
திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து 19 சவரன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா்- தாராபுரம் சாலை ராஜ வீதியைச் சோ்ந்தவா் கெளதம் (29), மண்பானை வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி அவரது தாயாா் வீட்டுக்கு சென்றிருந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டின் கதவை திறந்துவைத்து கெளதம் தூங்கியுள்ளாா்.
அப்போது மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளாா். பின்னா் மறுநாள் காலையில் எழுந்து பாா்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததும் அதற்குள் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததும் தெரியவந்தது. மேலும், பீரோவில் கைப்பட்டிருந்த 19 சரவன் நகை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கெளதம் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.