செய்திகள் :

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

post image

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து தமிழகத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் நடைபெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போடுவதிலும் தோ்தல் வியூகம் வகுப்பதிலும் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும், நடிகா் விஜய் தலைமையிலான தவெகவும் மும்முரம் காட்டி வருகின்றன.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கி மேற்கொண்டு வருகிறாா்.

பாஜகவும் அதன் அடிமட்டத்தை பலப்படுத்தும் வகையில் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி வருகிறது. ஆளும் திமுகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களவைக் கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்கள் தில்லி வந்துவிட்டுச் சென்றனா்.

அதைத் தொடா்ந்து நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் அமித் ஷா பங்கேற்றிருந்தாா்.

இந்த நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்,

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன்,

ஹெச்.ராஜா, பாஜக மகளிா் அணியின் தேசிய தலைவா் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சா் எல்.முருகன், தமிழக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்தனா்.

தில்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அக்கட்சித் தலைவா்கள் வாய் திறக்கவில்லை.

அதேவேளையில், வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ‘மனம் திறந்து பேச உள்ளேன்’ எனத் தெரிவித்திருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெற்ால் அது தொடா்பாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.

மேலும், கடந்த முறை இத்தலைவா்கள் தில்லி வந்தபோது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை வரவில்லை. அவா் அப்போது துபையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறையும் அவா் இத்தலைவா்களுடன் தில்லி வரவில்லை. சோளிங்கநல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்ததால் வரவில்லை என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமித் ஷாவுடனான சந்திப்பின்போது தமிழக தோ்தல், அரசியல் நிலவரம் குறித்த பேசப்பட்டதாகவும், கட்சிப் பணிகளை மேலும் சிறப்பாக நடத்துவது குறித்து

அமித் ஷாவிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

இச்சந்திப்புக்குப் பிறகு மாலையில், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் சென்னை புறப்பட்டுச் சென்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்ப... மேலும் பார்க்க

தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தகவல் அற... மேலும் பார்க்க

கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா். சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவ... மேலும் பார்க்க

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

தில்லியில் செங்கோட்டை வளாகத்திற்கு அருகில் நடந்த ஜெயின் மத விழாவில் இருந்து 760 கிராம் தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற நகைகள் பதிக்கப்பட்ட ’கலசம்’ திருடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்... மேலும் பார்க்க

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக... மேலும் பார்க்க

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா். ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பி... மேலும் பார்க்க