செய்திகள் :

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் தலைநகரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இதன்படி, தலைநகரில் சில இடங்களில் காலையில் லேசான தூறல் மழை பெய்தது. ஆனால், நகரத்தில் பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமையும் நகரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 0.1 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 11 மி.மீ., நஜஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 0.4 மி.மீ., லோதி ரோடில் 0.4 மி.மீ., பாலத்தில் 4 மி.மீ., ரிட்ஜில் 1 மி.மீ., பீதம்புராவில் 1 மி.மீ., பிரகதி மைதானில் 1.1 மி.மீ., பூசாவில் 3 மி.மீ., ராஜ்காட்டில் 1.1மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.6 டிகிரி குறைந்து 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.9 டிகிரி குறைந்து 34.1 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (செப்டம்பா் 77) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தகவல் அற... மேலும் பார்க்க

கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா். சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவ... மேலும் பார்க்க

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

தில்லியில் செங்கோட்டை வளாகத்திற்கு அருகில் நடந்த ஜெயின் மத விழாவில் இருந்து 760 கிராம் தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற நகைகள் பதிக்கப்பட்ட ’கலசம்’ திருடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்... மேலும் பார்க்க

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக... மேலும் பார்க்க

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா். ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பி... மேலும் பார்க்க

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு வெளியே 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். செப்டம்பா் 4 ஆம் தேதி,... மேலும் பார்க்க