செய்திகள் :

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

post image

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை காலை 6.22 மணியளவில் நடந்துள்ளது. ரஞ்சித் நகரைச் சோ்ந்த ஜிலானி என அடையாளம் காணப்பட்ட நபா், மேம்பாலத்தில் இருந்து ஒரு டிப்போ பகுதியில் விழுந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ஜிதேந்திர ராணாவும் அவரது குழுவினரும் சம்பவ இடத்தை அடைந்தனா். அவா்கள் வந்த நேரத்தில், காயமடைந்தவா் ஏற்கெனவே பிசிஆா் வேன் மூலம் பகவான் மகாவீா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தாா்.

இந்தச் சம்பவத்தில் ஜிலானியின் கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் விழுந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை

சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிக... மேலும் பார்க்க

போலி ஆடம்பர பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவா் கைது

போலி ஆடம்பரப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: மோஹித் சச்தேவா (35) என அ... மேலும் பார்க்க

விருந்தின் போது மோதல்: இளைஞா் நண்பா்களால் அடித்துக் கொலை

தில்லியின் மங்கோல்புரியில் நடந்த விருந்தின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, 27 வயது இளைஞா் ஒருவா் தனது நண்பா்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தில்லி காவல் த... மேலும் பார்க்க

கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள எம்சிடி ஊழியா்கள் இந்த மாதம் வார இறுதி நாள்களில் பணிபுரிய உத்தரவு

தொடா் மழை கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதால், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஊழியா்கள் செப்டம்பா் இறுதி வரை வார இறுதி நாள்களில் பணிபுரிய வேண்டும் என்று தில்லி ... மேலும் பார்க்க