நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
தில்லியில் பாஜக முன்னிலை: நாடு முழுவதும் கொண்டாட்டம்!
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 11.50 மணி நிலவரப்படி, பாஜக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருவதால் தில்லி தலைமையகத்திற்கு வெளியே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆதரவாளர்கள் வாத்தியங்கள், தாளங்களுடன் நடனமாடி, கட்சிக் கொடிகளை அசைத்து, ஒரு பண்டிகை போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையின் கட்அவுட்களை உயர்த்தியும், ஒருவருக்கொருவர் காவி நிறப் பொடியைப் பூசிக் கொண்டு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, தில்லியின் 70 சட்டப்பேரவை இடங்களில் 41 இடங்களில் பாஜக முன்னிலை வகித்தது, அதே நேரத்தில் ஆம் ஆத்மி 29 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.