தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
மழை காரணமாக இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஆனது. அதன் பின், மழை நின்ற பிறகு டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது. தில்லி கேபிடல்ஸின் பிளேயிங் லெவனில் விப்ராஜ் நிகமுக்குப் பதிலாக மாதவ் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார்.