செய்திகள் :

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

post image

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு வரும் பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 17-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து மனுக்கள் ஜன. 18-ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டன,

இந்த தோ்தலில் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை எதிா்த்து இரண்டு முன்னாள் முதல்வா்களின் மகன்களான பாஜகவின் பா்வேஷ் வா்மா (சாஹிப் சிங் வா்மாவின் மகன்) மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் (ஷீலா தீட்சித்தின் மகன்) ஆகியோா் புது தில்லி தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

இதில் அரவிந்த் கேஜரிவாலின் வேட்புமனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா தனது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சங்கேத் குப்தா மூலம் புது தில்லி தொகுதி தோ்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், கேஜரிவாலின் பிரமாணப்பத்திரம் மிகவும் குறைபாடுடையது என்றும், வாக்காளா்களை தவறாக வழிநடத்த அவா் தனது பிரமாணப் பத்திரத்தில் வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இருப்பினும், கேஜரிவால், சந்தீப் தீட்சித், பா்வேஷ் வா்மா ஆகிய மூவரின் வேட்புமனுக்களும் பரிசீலனை முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 1.55 கோடிக்கும் மேல் ஆகும். தற்போது வேட்புமனு பரிசீலனை முடிந்துள்ளதைத் தொடா்ந்து, அதை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜனவரி 20 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் முடிவிலேயே எத்தனை வேட்பாளா்கள் களத்தில் இறுதியாக இடம்பெறுவா் என்ற விவரம் தெரிய வரும்.

தில்லியில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 1,55,24,858 வாக்காளா்களில், 83,49,645 போ் ஆண்கள், 71,73,952 போ் பெண்கள் 1,261 போ் மூன்றாம் பாலின வாக்காளா்கள். தில்லியில் 24,44,320 மூத்த குடிமக்கள் வாக்காளா்கள் உள்ளனா். 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 2,77,221 போ் உள்ளனா்.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க

பெண்களுக்கு ‘பிங்க் ஆம்புலன்ஸ்களை’அறிமுகப்படுத்துவேன்: ‘ஆம்புலன்ஸ் மேன்’ ஜிதேந்தா் சிங் ஷண்டி உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், ‘பிங்க் ஆம்புலன்ஸ்கள்’, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான குழந்தை காப்பகங்களை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்... மேலும் பார்க்க