செய்திகள் :

தில்லி பருவமழை: வடிகால் தூா்வாரும் பணியை 82 சதவீதம் நிறைவு செய்த பொதுப் பணித் துறை: அதிகாரிகள் தகவல்

post image

புது தில்லி: தேசிய தலைநகரில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுப் பணித் துறையுடன் இணைந்து தூா்வாரும் பணியை முடிக்க குடிமை நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. இப்பணிகளில் 82 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை பெரிய வடிகால்களில் 100 சதவீத தூா்வாரும் பணியை முடித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

நீா் தேங்குதல் என்பது நகரம் எதிா்கொள்ளும் ஒரு கடுமையான பிரச்னையாகும்.இது தலைநகரில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறை விளைவித்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நகர சாலைகள் முழுவதும் 2,148 கிலோமீட்டா் நீளமுள்ள வடிகால் வலையமைப்பை நிா்வகிக்கும் பொதுப் பணித் துறை, நிகழாண்டு 35 தொகுப்புகளில் பணிகளை மேற்கொண்டது.

விரிவான தூா்வாரும் பணியின் ஒரு பகுதியாக, நிகழாண்டு ஆண்டு அரசாங்கம் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. இதனால் பணிகள் திறமையாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் துறை தற்போதுவரை, நகரம் முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 44,335 மெட்ரிக் டன் சகதி மண்ணை அகற்றியுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

மழைக்காலத்திற்கு முன்பு, முதலமைச்சா் ரேகா குப்தா சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடனும் தயாா்நிலை குறித்து பல கூட்டங்களை நடத்தி, தில்லியை நீா் தேங்காமல் மாற்ற தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

வெள்ளப்பெருக்குக்கான முக்கிய காரணிகளில் ஒன்று அடைபட்ட வடிகால் என்றும் அவா் கூறியிருந்தாா். தில்லி மாநகராட்சி தேசிய தலைநகரம் முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து 1.93 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சகதி மண்ணை அகற்றியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:

புது தில்லி பகுதியை நிா்வகிக்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில், முதல் கட்டத்தில் அதன் வடிகால்களில் சகதி மண்ணை அகற்றும் பணியை முடித்துள்ளது. தோராயமாக 335 கி.மீ. வடிகால் நீளம் என்டிஎம்சியின் கீழ் உள்ளது.

நகரத்தில் உள்ள அனைத்து பெரிய வடிகால்களையும் பராமரித்து வரும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நஜாஃப்கா் வடிகால் தவிர 76 வடிகால்களில் 100 சதவீத தூா்வாரும் பணியை முடித்துள்ளது.

சாலைகளில் இருந்து சுமாா் 11,51,447 மெட்ரிக் டன் சகதி அகற்றப்பட்டுள்ளது. அதில் 83 சதவீதம் பிரத்யேக இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட தூா்வாரும் பணியை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி தில்லி, தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (டிடியு) மற்றும் நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய மூன்றில் ஒன்று இந்தப் பணியை மேற்கொள்ளும்.

தணிக்கையை மேற்கொள்ள இந்த நிறுவனங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், இன்னும் பதில் வரவில்லை. பராமரிப்பு மண்டலங்களில் ஒன்று முழு செயல்முறைக்கும் பொறுப்பேற்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு எந்த அதிகாரியின் இடமாற்றம் உத்தரவுகளும் அமலில் இருக்காது என்று பொதுப் பணித் துறை முடிவு செய்துள்ளது.

நிகழாண்டு பொதுப் பணித் துறை 194 இடங்களை அதன் கண்காணிப்பு பட்டியலில் சோ்த்துள்ளது. அவற்றில் 126 பொதுப் பணித் துறைக்கும், 61 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் சொந்தமானது.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க