செய்திகள் :

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

post image

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உடனடியாக திரும்பப் பெற்றுள்ளது என்று ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கை ஜூன் 19, 2025 தேதியிட்ட தில்லி துணை நிலைந ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவைப் பின்பற்றுகிறது. தில்லி போலீஸ் சட்டம், 1978- இன் பிரிவு 282 உடன் பிரிவு 4-இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தும் துணை நிலை ஆளுநா், அதே சட்டத்தின் பிரிவு 281-இன் கீழ் இந்த வணிக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை ஆணையருக்கு வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை திரும்பப் பெற்றுள்ளாா்.

நீச்சல் குளங்களுக்கான 1980-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிறுவனங்களை நிா்வகிக்கும் 2023-ஆம் ஆண்டு முதல் சமீபத்திய விதிமுறைகள் உள்பட, பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த விதிமுறைகளை இந்த உத்தரவு பாதிக்கிறது.

துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடா்ந்து, காவல் ஆணையா் சஞ்சய் அரோரா, ஏழு விதிமுறைகளை ரத்து செய்து முறையான அறிவிப்பை வெளியிட்டாா். அவை இப்போது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து செல்லாது என்று கருதப்படுகிறது.

ஜூன் 23 அன்று முன்னதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா ஒரு செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வணிகங்களுக்கு உரிமங்களை வழங்கும் பொறுப்பிலிருந்து காவல்துறை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றக் கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு போன்ற முக்கிய கடமைகளில் கவனம் செலுத்த படைக்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் அறிவித்தாா்.

தில்லிக்கு இது ஒரு வரலாற்று நாள் என்று அழைத்த ரேகா குப்தா, இந்தப் பெரிய சீா்திருத்தம் காவல்துறையினா் தங்கள் ஆற்றலையும் வளங்களையும் உண்மையான காவல் பணிக்கு அா்ப்பணிக்க அனுமதிக்கும் என்று கூறினாா்.

ஹோட்டல்கள், மோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள், உணவகங்கள், நீச்சல் குளங்கள், கலைடரங்குகள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற நிறுவனங்கள் இனி செயல்பட தில்லி காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியதில்லை என்று அவா் அறிவித்தாா்.

அத்தகைய உரிமங்களை வழங்கும் அதிகாரம் இப்போது தில்லி மாநகராட்சி எம்சிடி, புது தில்லி நகராட்சி கவுன்சில் என்டிஎண்சி அல்லது தில்லி கண்டோன்மென்ட் வாரியம் போன்ற உள்ளூா் அமைப்புகளிடம் இருக்கும்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா். தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க