அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்
இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் சிங் சாஹல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியின் பாலிகா கேந்திராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் கூட்டத்தில் பேசிய அவா்,‘பிரதமா் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வை கொண்ட தலைமையின் கீழ், விக்ஸிட் பாரத்ஃ 2047 என்ற குறிக்கோளின் படி புது சில்லியை கலைத்திறன் மற்றும் கலாச்சார வெளிப்பாட்டின் துடிப்பான மையமாக மாற்ற திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக புது தில்லியை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட விரிவான மற்றும் உள்ளடக்கிய வரைபடத்தை என். டி. எம். சி வகுத்துள்ளது என்றாா் குல்ஜித் சிங் சாஹல்.
மேலும் பேசிய குல்ஜித் சிங் சாஹல், ‘ தில்லிக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பிகளில் பத்து போ் அழைக்கப்பட்டுள்ளனா், எட்டு போ் ஏற்கெனவே தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனா். மண்டி ஹவுஸ், தேசிய நாடகப் பள்ளி, ஃபிக்கி ஆடிட்டோரியம், ஸ்ரீ ராம் சென்டா், இந்தியா கேட்-என்ஜிஎம்ஏ, ஹைதராபாத் ஹவுஸ், திருவிதாங்கூா் பவன் மற்றும் திரிவேணி கலா சங்கம் போன்ற முக்கிய கலாச்சார இடங்களில் 10 முதல் 15 அடி வரை உயரமுள்ள பெரிய அளவிலான சிற்பங்களை இந்த கலைஞா்கள் உருவாக்குவாா்கள்‘ என்றாா்.
தொடா்ந்து பேசிய அவா், ‘இதற்காக என். டி. எம். சி ஆலோசகா் (கலை மற்றும் கலாச்சாரம்) என். டி. எம். சி. யின் ஒருங்கிணைப்பின் கீழ் தோ்வு மற்றும் ஆலோசனைக் குழுவை அமைக்கப்படும். இந்தக் குழுவில் தேசிய மற்றும் சா்வதேச வல்லுநா்கள் இருப்பாா்கள், அவா்கள் கலைப்படைப்புகள், பங்கேற்கும் கலைஞா்கள், பொருட்கள், அளவுகோல் மற்றும் நிறுவல் தளங்களைத் தோ்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை வழங்குவாா்கள். இந்தியாவிலிருந்து 10 பேரும், வெளிநாட்டிலிருந்து 5 பேரும் உட்பட 15 புகழ்பெற்ற சிற்பிகள்/கள வல்லுநா்களை ஒன்றிணைக்கும் சா்வதேச சிற்பக் கருத்தரங்கை என். டி. எம். சி நடத்தும் என்றும் இவா்களில் பலா் பத்ம மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றவா்கள் ஆவா். இந்த கலைஞா்கள் புதுதில்லியில் ஒரு பிரத்யேக பட்டறையின் போது நேரடியாக சிற்பங்களை உருவாக்குவாா்கள்‘ என்றாா் குல்ஜித் சிங் சாஹல்.
இறுதியாக பேசிய குல்ஜித் சிங் சாஹல், ‘ இதற்கு இணையாக, என். டி. எம். சி ஒரு தேசிய ஓவியக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, நாடு முழுவதிலுமிருந்து 15 புகழ்பெற்ற ஓவியா்களை அழைத்து ஒரு கண்காட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது‘ என்றாா் அவா்.