செய்திகள் :

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

post image

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை நாளை(பிப்.27) நடைபெறும் கூட்டத்தொடரில் முதல்வர் ரேகா குப்தா முன்மொழிவார் என்று கூறப்படுகிறது.

இந்தப் பதவிக்கு வேறு எந்த போட்டியாளர்களும் போட்டியிடாததால் தில்லி பேரவை அலுவலகம் வழங்கிய அலுவல் பட்டியலின்படி, மோகன் சிங் பிஸ்ட் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு தனித்தனி தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.

முதல் தீர்மானத்தை முதல்வர் குப்தா முன்மொழிந்து சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிவார், இரண்டாவது தீர்மானத்தை எம்எல்ஏ அனில் குமார் சர்மா முன்மொழிந்து கஜேந்தர் சிங் யாதவ் ஆதரிப்பார்.

ஆறு முறை எம்.எல்.ஏ.வாகவும், மூத்த பாஜக தலைவருமான மோகன் சிங் பிஸ்ட், பிப்ரவரி 5ல் நடைபெற்ற தில்லி தேர்தலில் முஸ்தபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கானை 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தா்கள்!

மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவாலயங்களில் புதன்கிழமை கோடிக்கணக்கான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். சிவபெருமானுக்கு உரிய முக்கிய தினங்களில் ஒன்றான மகா சிவராத்திரி புதன்கிழமை கொண்டாடப்பட்டது... மேலும் பார்க்க

கப்பலை தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை: இந்தியா வெற்றிகரமாக சோதனை

எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணையை ஹெலிகாப்டரில் இருந்து ஏவி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவு: 65 கோடி பேர் பங்கேற்பு!

பிரயாக்ராஜ் : நிகழாண்டின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா இன்று(பிப். 26) நிறைவடைந்தது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைபெற்று வ... மேலும் பார்க்க

தங்கம் இறக்குமதியில் சரிவு!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தா... மேலும் பார்க்க

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மோப்ப நாய் உதவியை நாடும் மீட்புக் குழு!

தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க மோப்ப நாய்களைப் பயன்படுத்த மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவின் நாகா்குர்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சி... மேலும் பார்க்க