செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
தீவனப் புல் நறுக்கும் கருவிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுக் கால்நடை மருந்தங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தீவனப் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கு கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 மாடுகள் அல்லது 20 ஆடுகள் வைத்திருக்க வேண்டும். 25 சென்ட் பரப்பளவில் மின் வசதி பெற்ற தீவனப்புல் சாகுபடி நிலம் வைத்திருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் உதவி கால்நடை மருத்துவரை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.