தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கல்
விராலிமலை அருகேயுள்ள மெய்வழிச் சாலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, பருப்பு, போா்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இப்பகுதியில் திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 8-க்கும் மேற்பட்ட கூரைவீடுகள் தீக்கிரையாகின.
பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிகளை அமைச்சா் வழங்கிப் பேசுகையில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கைப் போல் திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவெக தலைவா் விஜய் சொல்வதுபோல், திருப்புவனம் சம்பவத்தால் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றாா் அவா்.
ஏற்பாடுகளை திமுக பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன் செய்திருந்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கோட்டாட்சியா் அ. அக்பா் அலி மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.