எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்
போ்ணாம்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது.
போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியைச் சோ்ந்தவா் எல்லப்பன். இவரது குடிசை வீடு சாலையோரம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இவரது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இது குறித்து வருவாய்த் துறையினா், காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.