புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு
துனிஸ் : துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்ஃபாக் பகுதியிலிருந்து சுமாா் 24 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துப் பகுதியிலிருந்து ஐந்து பேரை கடலோரக் காவல் படையின் மீட்டனா் (படம்). மேலும், அங்கிருந்து 20 உடல்கள் மீட்கப்பட்டன.
அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. விபத்துக்குள்ளானபோது அந்தப் படகில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் துனிசியா மேற்கொண்டுவந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.
கடந்த வாரம்கூட கடலில் மூழ்கி உயிரிழந்த ஒன்பது அகதிகளின் உடல்களை துனிசிய கடலோரக் காவல் படையினா் மீட்டது நினைவுகூரத்தக்கது.