செய்திகள் :

துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் - குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி

post image

திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தன் மனைவி பிரியாவிடம் கூறி இருந்தார்.

சிகாமணி

சிகாமணி கடைசியாக கடந்த மாதம் 24-ம் தேதி  பிரியாவிடம் பேசியுள்ளார். அதன்பிறகு அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

 தன் கணவரை  தொடர்பு கொள்ள முடியாததால், பிரியா துபாயில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, “சிகாமணி கடந்த 21-ம் தேதியே இந்தியா கிளம்பிவிட்டார்.” என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பிரியா தன் கணவரை காணவில்லை என்று கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

பீளமேடு காவல்நிலையம்

ஆரம்பத்தில் ஆள் காணவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறை விசாரணையில்,” கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்ற பெண் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கும், சிகாமணிக்கும் திருமணம் தாண்டி உறவு இருந்துள்ளது. அதில் ஏதாவது பிரச்னை ஆகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் அவரின் மனைவி பிரியா கோவையில் புகாரளித்தார்.

துபாய்

 காவல்துறையினர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சாரதாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் அங்கு இல்லை என்பதால் சாரதாவின் வளர்ப்பு அப்பா தியாகராஜனை அழைத்துள்ளனர். தியாகராஜன் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் நேரில் சென்றுள்ளார்.

சாரதா துபாயில் உள்ள சிகாமணியின் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்குள் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். அப்போது சாரதா சிகாமணிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.

கோவை
கோவை

ஒருகட்டத்தில் அதனை சாரதா திருப்பி கேட்ட போது சிகாமணி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாரதா கோபித்துக் கொண்டு கோவை திரும்பிவிட்டார். அவரை சமாதானப்படுத்த சிகாமணி கோவை வந்துள்ளார்.

இதனிடையே சாரதா இந்த விவகாரத்தை தன் அப்பா தியாகராஜனிடம் கூறியுள்ளார். அவர்கள் சிகாமணியை கொலை  செய்வதற்காக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி பசுபதி பாண்டியனின் கூட்டாளி குட்டி தங்கம் என்றழைக்கப்படும் புதியவனை அணுகியுள்ளனர். புதியவன் கோவை வந்துள்ளார்.

Liquor - மது

சிகாமணிக்கு தடபுடல் விருந்து வைப்பதாக கூறி மது கொடுத்து, அசைவ உணவும் சாப்பிட வைத்துள்ளனர். அதில் ஏராளமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே சிகாமணி மயக்கமடைந்தார்.

பிறகு அவரை தியாகராஜன், சாரதா இணைந்து தாக்கி கொலை செய்தனர். சிகாமணியின் உடலை காரில் எடுத்துச் சென்று கரூர் மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளனர். தொடர்ந்து சாரதாவை துபாய் அனுப்பிவிட்டு புதியவன் நெல்லைக்கும், தியாகராஜன் கோவைக்கும் திரும்பியுள்ளனர்.

சடலம்

பொன்னமராவதி போலீஸ் சிகாமணியின் சடலத்தை அடையாளம் தெரியாத உடல் என்று வழக்குப்பதிவு செய்து அடக்கம் செய்துள்ளனர். காவல்துறை மோப்பம் பிடித்துவிட்டதால் சாரதாவின் வளர்ப்பு அப்பா தியாகராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்து கொலையை ஒப்புக் கொண்டார். " என்றனர்.

தியாகராஜனின் பின்னணியை கேட்டு காவல்துறைக்கு தலை சுற்றிவிட்டது. தியாகராஜன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (69). தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் கோமதி என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது.

தியாகராஜன்

கோமதி, அவரின் மகள்கள் நிலா மற்றும் சாரதா ஆகியோருடன் தியாகராஜன் வசித்து வந்துள்ளார். சாரதாவுக்கு குணவேல் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தியாகராஜன் குணவேலை கொலை செய்தார். இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் வாங்கி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

கைது
கைது

தற்போது அதே மகளுக்காக மீண்டும் ஒரு கொலை செய்து சிறை சென்றுள்ளார். இதுதொடர்பாக புதியவன், சாராதாவின் அம்மா கோமதி, சகோதரி நிலா, ஸ்வாதி ஆகிய 4 பேரை காவல்துறை கைது செய்தனர். சாரதாவை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஆள் மாயமான வழக்கை பீளமேடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். மேலும், அடக்கம் செய்யப்பட்ட சிகாமணியின் சடலத்தை மீட்டு கரூரில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை

பிறகு அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்வதற்காக அவரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனை கடித்த நாய் - விசாரணையில் இறங்கிய போலீஸ்

சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார்... மேலும் பார்க்க