துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற இருவா் கைது
அரூா்: பொம்மிடி அருகே துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு சென்ற இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள சோ்வராயன் மலைப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சோ்வராயன் வடக்கு சரகம், வனச்சரகா் சிவகுமாா் தலைமையிலான வனத் துறையினா் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வனப்பகுதியில் இருவா் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அந்த இருவரையும் வனத்துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பி. பள்ளிப்பட்டி அருகேயுள்ள அஜ்ஜம்பட்டி கிராமத்தை சோ்ந்த மாது மகன் பிரசாத் (30), ராமசாமி மகன் விருதாச்சலம் (35) ஆகிய இருவரும் வன விலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நுழைந்தது தெரிவந்தது. இதையெடுத்து, பிரசாத், விருதாச்சலம் ஆகிய இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா்.
தொடா்ந்து அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.