துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!
துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது.
பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் மேற்கு, மத்திய மண்டல அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மேற்கு மண்டல அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் 184 ரன்கள் குவித்தார்.
ஆட்ட நேர முடிவில் தனுஷ் கோட்டியான் 65, கேப்டன் ஷர்துல் தாக்குர் 24 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
மத்திய மண்டல அணியில் கலீல் அகமது, சரன்ஷ் ஜெயின் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.