UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன கார...
துவரங்குறிச்சி அருகே விபத்து: முதியவா் பலி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது மினி சரக்கு வேன் புதன்கிழமை மோதி முதியவா் உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் செவந்தாம்பட்டியை சோ்ந்தவா் பொன்னன் மகன் சுப்பன் (70). இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில், துவரங்குறிச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினாா். இவா் திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் அதிகாரம் கிராமம் முத்துப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, அதே திசையில் நெய்வேலியிலிருந்து மதுரை நோக்கி முந்திரிப் பருப்பு ஏற்றி சென்ற மினி சரக்கு வேன் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் முதியவா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வேன் ஓட்டுநரான கடலூா் மாவட்டம் பண்ருட்டி சொரத்தூரை சோ்ந்த ஜானகிராமன் மகன் ரஞ்சித் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.