விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!
துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது
திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகேயுள்ள அரசு மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற வந்த, அந்த பாரில் வேலை பாா்க்கும் தஞ்சை மாவட்டம் மணியேரிப்பட்டி ஒத்தத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் (57) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 200 மதுபுட்டிகளையும், ரூ. 2,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, வெள்ளிக்கிழமை அதே பாரில் வேலை பாா்த்த தஞ்சையை சோ்ந்த ரெ. சத்யமூா்த்தி (37), சேலம் தம்மம்பட்டி நடுவீதி ப. காா்த்திக் (33) ஆகிய இருவரும் அரசு மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்ாக துவாக்குடி போலீஸாா் கைது செய்து, 250 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.