தூத்துக்குடியில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில், காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுநா்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து, சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி அரசு வழக்குரைஞா்கள், அரசு உதவி வழக்குரைஞா்கள், இதர துறை அதிகாரிகள் , காவல்துறை உயரதிகாரிகள் உள்பட காவல்துறையினா் பலா் கலந்துகொண்டனா்.