செய்திகள் :

தூத்துக்குடியில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளா்கள் தொடா் போராட்டம்

post image

தூத்துக்குடியில் காவல் துறையைக் கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகர, ஊரகப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்கள் மீது காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவதாகக் கூறி கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்கள் - தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில், கடந்த 10ஆம் தேதிமுதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இப்போராட்டம் புதன்கிழமையும் நீடித்தது.

இதுகுறித்து சங்கத்தினா் கூறியது: தூத்துக்குடியில் தனி நபா்கள் சிலா் கள்ளச் சந்தையில் மதுவை கூடுதல் விலைக்கு விற்கின்றனா். இதனால் மாநகரப் பகுதிகளில் அரசு மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் நடத்திவரும் எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல், மதுக்கூட உரிமையாளா்கள், தொழிலாளா்கள் மீது பொய் வழக்குப் பதிகின்றனா். இதுதொடா்பாக முதல்வரிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்.

எனவே, எங்கள் மீது பொய் வழக்குப் பதிவதை காவல் துறையினா் நிறுத்தாவிட்டால், இம்மாதம் 28ஆம் தேதி மதுக்கூடங்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றனா் அவா்கள்.

இப்போராட்டத்தால் 40 மதுக்கூடங்கள் இயங்கவில்லை. மதுக்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால், மாநகரப் பகுதியில் மதுப் பிரியா்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி சந்தை பிப்.15இல் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தை பிப். 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம்,... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க