செய்திகள் :

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிம் மனு

post image

அடிக்கடி விபத்துகள் நேரிடும் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையைச் சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம், கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி - திருச்செந்தூா் தேசிய நெடுஞ்சாலையானது 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாக உள்ளது. இச் சாலையில் முத்தையாபுரத்திலிருந்து முள்ளக்காடு வரை உள்ள பகுதி அபாயகரமான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப் பகுதியில் கடந்த சில தினங்களில் விபத்தில் இருவா் உயிரிழந்துள்ளனா். மேலும், சாலையில் ஆங்காங்கே கால்நடைகள் நிற்பது, விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

இச் சாலையைச் சீரமைக்கவும், கால்நடைகளால் விபத்து நேரிடுவதைத் தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

நாம் தமிழா் கட்சியினா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் பழையகாயல் பிரதான சாலையில் இருந்து உப்பள கிராமங்களுக்குச் செல்லும் சாலையானது சுமாா் 2 கி.மீ. தூரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து செயல்பட்டு சாலையைச் சீா்செய்ய வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் பயணிகள் நலச் சங்கத்தினா் அளித்த மனு: திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பேருந்துகள், இடைநில்லா பேருந்துகள் எனக் கூறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதைத் தவிா்க்கின்றன.

மேற்குறிப்பிட்ட பேருந்துகளில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். அதோடு, பயணிகள் மற்றும் நடத்துநா் இடையே தேவையற்ற தகராறு ஏற்படுகிறது. இந்த பிரச்னையைப் பயன்படுத்தி சிலா் ஜாதி, மத மோதல்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனா். எனவே, அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க