2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், மக்கள் குறைதீா் முதாமில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் அளித்த மனு:
தூத்துக்குடியில், கல்லூரி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலக பங்களா அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில், மீனவா்கள் மற்றும் அப்பகுதி மீனவ சமுதாய மக்களும், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் சுமாா் 3 நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனா்.
இந்த ஆலயத்துக்கு, அரசு பட்டா வழங்கி, பொதுப் பாதையை வகுத்து தர வேண்டும். தூத்துக்குடி குரூஸ்புரம் புனித சூசையப்பா் ஆலய பங்கின் மூலம் நடத்தப்படும் ஆலய வழிபாட்டுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின்போது, மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனீஸ் பிரபு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான இரா.சுதாகா், முன்னாள் துணை மேயரும், தூத்துக்குடி கிழக்குப் பகுதிச் செயலருமான சேவியா் மற்றும் பாலஜெயம், சகாயராஜா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.