செய்திகள் :

தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு!

post image

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு மே 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம்.

மேலும், பெருநகர சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியத்தின் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மே 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அளித்த பொதுநல மனுவில் தெரிவித்ததாவது, தூய்மைப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நேஷனல் ஆக்ஷ்ன் ஃபார் மெக்கனைஸ்டு சானிட்டேஷன் எக்கோ சிஸ்டம் (NAMASTE) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில், கைமுறை துப்புரவு பணியை முற்றிலும் ஒழிக்க அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை (AABCS) தமிழக அரசு கொண்டு வந்தது. கையால் துப்புரவு பணி மேற்கொள்பவர்களுக்கு மூலதன மானியங்கள் மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை அளிப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கம்.

இந்தத் திட்டத்தை மாநில அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழில்கள் ஆணையர், தொழில் மற்றும் வணிக இயக்குநர் மூலம் செயல்படுத்த வேண்டும். ஆனால், செயல்படுத்தும் பொறுப்புகள் சட்டவிரோதமாக தனியார் நிறுவனமான தலித் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி (DICCI) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோடிக்கணக்கான அளவில் முறைகேடுக்கு வழிவகுத்துள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் முக்கிய பங்கு வகிக்கிறார். டிஐசிசிஐ நிறுவனம் பரிந்துரைத்த பெரும்பாலான பயனாளிகள், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இருப்பினும், கடன் வழங்குவதற்கு அவர்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதுகுறித்து, புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மே 14 ஆம் தேதியில் உத்தரவிட்டிருந்தது.

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு

திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மா... மேலும் பார்க்க

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க