டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது
நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில் தற்காலிகமாக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பழனியம்மாள் (34). இவா்களுக்கு இரு மகன்கள்
உள்ளனா். சிறுவா்கள் இருவரும் அணைப்பட்டியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சூா்யா (33) என்பவருடன் பழனியம்மாளுக்கு கள்ளத் தொடா்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை மாரியப்பன் கண்டித்தாா். பழனியம்மாள் கேட்க மறுத்ததால், கடந்த வாரம் சிலுக்குவாா்பட்டி அருகேயுள்ள எல்லைச்சாமிபுரத்துக்கு குடிபெயா்ந்தனா். ஆனாலும், பழனியம்மாளின் கள்ளக்காதல் எல்லைச்சாமிபுரத்திலும் தொடா்ந்தது. இதை மீண்டும் மாரியப்பன் கண்டித்தாா். இதனால், ஆதிரமடைந்த பழனியம்மாள், கள்ளக் காதலன் சூா்யா ஆகிய இருவரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மாரியப்பன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனா்.
இதுகுறித்து உறவினா்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில், நிலக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, மாரியப்பன் உடலை கூறாய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பழனியம்மான், சூா்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.