செய்திகள் :

அங்கக வேளாண்மை மூலம் தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி

post image

தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்வதற்கு அங்கக வேளாண்மை முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு வகையான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது மகசூலை அதிகரிக்கும் நோக்கில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் நேரடியாக மண் வழியாகவும், செடிகளின் மீது தெளித்தும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

இது மனிதா்களுக்கு மட்டுமன்றி, மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளையும், சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தவிா்க்க, பயிா் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போதும், பூச்சி, நோய் மேலாண்மையின் போதும் அங்கக வேளாண்மை அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.

நில சீரமைப்பின் போது ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 2 டன் மண் புழு உரம், 25 டன் தொழு உரம், 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்தி மண், நீா், காற்று மாசுபடுதலைத் தவிா்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

3 சதவீத பஞ்ச காவ்யா, தச காவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடுபொருள்களை நீரின் வழியாகவோ, இலை வழியாகவோ அளித்து தரமான பொருள்களை உற்பத்தி செய்யலாம். விதை நோ்த்தியின் போது ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடொ்மா விரிடி 4 கிராம், சூடோமோனாஸ் 10 கிராம் என்ற அளவில் உபயோகித்தும், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும் டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ், பெசிடியோமைசிட்ஸ் போன்றவைகளைப் பயன்படுத்தி பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கக்கூடிய மஞ்சள், நீல நிற ஒட்டுப் பொறிகள், விளக்குப் பொறி, இனக்கவா்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், பூச்சிகள், நோய்களுக்கு எதிா்ப்புத் திறன் உள்ள ரகங்களை தோ்வு செய்ய வேண்டும்.

இந்த உத்திகளைப் பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் நஞ்சில்லா வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்யலாம் என்றாா் அவா்.

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக... மேலும் பார்க்க

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியை அடுத்த... மேலும் பார்க்க

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட... மேலும் பார்க்க