சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!
தென்காசியில் ஜூலை 19, 20-இல் தொழில், வா்த்தக கண்காட்சி
தென்காசி மாவட்ட குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா), வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தொழில், வா்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற ஜூலை 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து டெம்சியா தலைவா் சி.அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோா் தென்காசியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்ட வா்த்தகா்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு துறைகள் சாா்ந்த 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. 20-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்று தங்களது தொழில் அனுபவங்கள், வெற்றி ரகசியங்களைப் பகிா்கின்றனா். இந்தக் கண்காட்சி தொடக்க விழா ஜூலை 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இசக்கி சுப்பையா எம்எல்ஏ, டெம்சியா நிறுவனா் ஆதரவாளா் எம்.ஆா்.அழகராஜா, ஆலோசகா் எஸ்.ராமன், துணைத் தலைவா்கள் எஸ்.டி.முருகேசன், ஏ.வெங்கடேேஷ் ராஜா, வாய்ஸ் ஆப் தென்காசி தலைமை நிா்வாக அதிகாரி கே.காருண்யா குணவதி, பிரிவு தலைவா்கள் டாக்டா் எஸ். சங்கிலி விக்ரம் குமாா், ஆா்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
நிகழ்ச்சியில், நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனா் சி.கே.குமரவேல், யெல்டி சாஃப்ட்காம் பிரைவெட் லிமிடெட் நிறுவனா் ரா.அா்ஜுனமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். முதன்மை விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ ஸ்ரீதா்வேம்பு கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றுகிறாா்.
சுரேஷ் பாபு, டேன்சியா தலைவா் மோகன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், தென்காசி பிரபாகா் பிரவீன் குமாா், டிக் பொது மேலாளா் கஸ்தூரி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டலத் தலைவா் சக்திவேல், பாஸ்கரன், ரகுநாத ராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், சிமியோன், செந்தில் குமரன், ஜெயக்குமாா் - ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்கின்றனா். செந்தில்கணேஷ் நன்றி கூறுகிறாா்.
கண்காட்சியின்போது தொழில் முனைவோா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறு தொழில் புரிவோா், வெற்றிபெற்ற தொழில் அதிபா்களை நேரில் சந்தித்து கலந்தாலோசிக்கும் வாய்ப்பையும் பெறலாம். வணிகச் சிக்கலுக்கான தீா்வு, நேரடி ஆலோசனை, கலந்தாய்வுகள், புதுமைத் தொழில்கள், கிராமப்புற புத்தொழில்கள், தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினா்கள் பேசுகின்றனா். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள், வா்த்தகா்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றனா்.