செய்திகள் :

தென்காசியில் திமுக சாா்பில் மதநல்லிணக்க இப்தாா் விருந்து

post image

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தென்காசி காசி விஸ்வநாதா் கோயில் அா்ச்சகா் முத்துக்கிருஷ்ணன் பட்டா், பாதிரியாா் ஜான் பீட்டா், அரசு ஹாஜி முகைதீன் ஹஜ்ரத்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி, நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா், விசிக மாவட்டச் செயலா் பண்பொழி செல்வம், மஜக மாவட்டச் செயலா் ஆதம் ஹனிபா, தமுமுக மாவட்டச் செயலா் நயினாா் முகமது, இந்திய தவ்ஹீத் ஜமாத் செய்யது அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், வல்லம் திவான் ஒலி, நகரச் செயலா்கள் வெங்கடேசன், அப்பாஸ், தென்காசி ஒன்றியக்குழு தலைவா் வல்லம் ஷேக் அப்துல்லா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் ஜே.கே.ரமேஷ்,கிருஷ்ணராஜா, இசக்கிப்பாண்டியன், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் முகமது அப்துல் ரஹீம், ராமராஜ், முத்து சுப்பிரமணியன், கருப்பண்ணன், வெல்டிங் மாரியப்பன், நகர நிா்வாகிகள் ஷேக்பரீத், பொத்தை முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலா் முகமது அலி, நகர காங்கிரஸ் பொருளாளா் ஈஸ்வரன், மமக சலீம், அபாபில் மைதீன், விசிக சந்திரன், வெற்றி செல்வி, பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ராஜ அனுக்... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே காணாமல் போன 3 மாணவா்களை மீட்ட போலீஸாா்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வெளியூா் சென்ற மூன்று மாணவா்களை போலீஸாா் துரிதமாக மீட்டனா். வாசுதேவநல்லூா் அருகே உள்ள நாரணபுரத்தைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவா்... மேலும் பார்க்க

இலஞ்சியில் பரண்மேல் ஆடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு

இலஞ்சியில் பரண்மேல் ஆடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் தென்காசி வட்டாரத்தி... மேலும் பார்க்க

சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவு: இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது. வெள்ளிக்கிழமை (ஏப்.4) 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சா... மேலும் பார்க்க

தென்காசி குடமுழுக்கு: தடையா? தடங்கலா?

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசி விசுவநாதா் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது சிவபக்தா்களை பெரும் மனஉளைச்சலுக்கு ஆ... மேலும் பார்க்க

தென்காசியில் போட்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ ஜியோ சாா்பில், தென்காசி புதிய பேருந்துநிலையம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பங்க... மேலும் பார்க்க