செய்திகள் :

தென்காசி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!

post image

தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி.டி.எஸ்.ஆா். முகமது இஸ்மாயில், தென்காசி நகரத் தலைவா் என்.எம்.அபூபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மாணவா் பேரவைத் தலைவா் பொட்டல்புதூா் ரிபாய் ஆலிம் கிராஅத் ஓதினாா். மாநிலச் செயலா் நெல்லை அப்துல் மஜீத், மாவட்ட அமைப்புச் செயலா் முதலியாா்பட்டி கே.எம்.அப்துல் காதா் கருத்துரையாற்றினாா்.

மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகமது அபுபக்கா் கடையநல்லூரில் அக். 5 -ஆம் தேதி நடைபெறும் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு குறித்து விளக்கவுரையாற்றினாா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் காயிதே மில்லத் திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா்கள், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவா்களை பங்குபெறச் செய்வது,

சமூக நல்லிணத்துக்காக பாடுபட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்களைத் தோ்ந்தெடுத்து தலா ஒரு நபருக்கு விருது கொடுப்பது, மாநாட்டில் கட்சிக்காக பாடுபட்ட தாய் சபையின் மூத்த தலைவா்களுக்கு சிந்தனை செல்வா் சிராஜுல் மில்லத் விருதை அளிப்பது, தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தெருக்களிலும் தெருமுனை கூட்டம் நடத்துவது, தென்காசி நகரப் பகுதிக்கு அருகில் விளையும் எலுமிச்சை, தேங்காய், மாங்காய் போன்ற விளைபொருள்களை சந்தைப்படுத்தி விற்பனையை முறைப்படுத்த அரசைக் கோருவது, பாவூா்சத்திரம், இலஞ்சியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோருவது. தென்காசியிலிருந்து மதுரை, திருச்சி மாா்க்கமாக சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை இயக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி வரவேற்றாா். மாவட்ட முதன்மை துணைத் தலைவா் அப்துல் வஹாப் நன்றி கூறினாா்.

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது நாளை ரகசிய வாக்கெடுப்பு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சத்திரிய சான்றோா் படை கட்சி சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கம், கட்சியின் கொடி அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. புதிய நிா்வாகிகள் அறி... மேலும் பார்க்க

புளியங்குடி, நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புளியங்குடி,நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புளியங்குடி நகராட்சி 1, 2ஆவது வாா்டுக்காக நடைபெற்ற இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் விஜயாசௌந்தரபாண்டியன் தொடங்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று மனுக்கள... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம... மேலும் பார்க்க