"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையொட்டி, நிகழாண்டு சாரல் விழா சனிக்கிழமை (ஜூலை 19) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. தொடா்ந்து 27ஆம் தேதி வரை விழா நடைபெறும்.
அதேபோல, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலா்க் கண்காட்சி ஜூலை 20முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் அவா்.