மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்
ஆலங்குளம் காவல் நிலையம் இடமாற்றம்
ஆலங்குளம் காவல் நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இட மாற்றம் செய்யப்பட்டது.
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த காவல் நிலையம், நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக காவல் நிலைய வளாகமே முற்றிலும் அகற்றப்பட்டு பிரதான வாசல் வரை கழிவுநீா் வடிகால் கட்டப்பட்டது.
1998-இல் கட்டப்பட்ட இந்தக் காவல் நிலைய கட்டடம் சாலையை விட சில அடி உயரமாக இருந்த நிலையில், சாலை மட்டத்தை விட பல அடி பள்ளத்தில் சென்ால் கடந்த ஆண்டு அக். 2 ஆம் தேதி பழைய மகளிா் காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
அந்தக் கட்டடமும் சாதாரண மழைக்கும் தாக்குப்பிடிக்காமல் இருந்ததால் மறுபடியும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அலுவலகப் பணிகள் அங்கு மாற்றம் செய்யப்பட்டதால், பழைய அலுவலகக் கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து அந்தக் கட்டடம் காவல் நிலையத்துக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் அங்கு காவல் நிலையம் செயல்படத் தொடங்கியது.