``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
ஆலங்குளத்தில் முப்பெரும் விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சத்திரிய சான்றோா் படை கட்சி சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கம், கட்சியின் கொடி அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
புதிய நிா்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனா். கட்சி நிறுவனா் ஹரி நாடாா் பங்கேற்று நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்க வேண்டும். நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜா் பெயா் சூட்ட வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சி.பா.ஆதித்தனாா் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களிடம் ஹரி நாடாா் கூறுகையில், 2021 பேரவைத் தோ்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக தோல்வியடைவதற்கு நான் பெற்ற 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளே காரணம். 2026 தோ்தலிலும் இங்கு போட்டியிடுவது உறுதி. கூட்டணி குறித்தும் பல்வேறு கட்சிகள் பேசிவருகின்றன. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. ஒரு கோடி வழங்க வேண்டும் என்றாா்.