தென்கொரியா: பாறை மீது மீன்பிடி படகு மோதியதில் 3 பேர் பலி
தென்கொரியாவில் பாறையில் மீன்பிடி படகு பாறையில் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
தென் கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் கேஜியோ தீவு அருகே பாறைகள் மீது மீன்பிடி படகு இன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்கள்.
அவர்கள் தங்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்ததாக நம்பப்படுகிறது.
மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் முழுவீச்சில் ஏற்பாடுகள்!
மற்ற 19 பேர் கடலோரக் காவல்படை மற்றும் அருகில் இருந்த கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முதலில் படகில் 21 பேர் இருந்ததாகக் கூறிய கடலோரக் காவல்படை பின்னர் அதில் 22 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளது.
முன்னதாக திங்களன்று, மேற்கு தென் கொரியாவில் சரக்கு மற்றும் கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியதில் இருவர் மீட்கப்பட்டனர், மேலும் 5 பேர் மாயமானார்கள்.