செய்திகள் :

தென்னிந்திய ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்

post image

மன்னாா்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில், தட்சிணாமூா்த்தி, துரைராஜ், ரங்கசாமி நினைவு சுழற்கோப்பைக்கான இப் போட்டி, மன்னாா்குடி வஉசி சாலை பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த ஜூலை 26 முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.

தமிழ்நாடு காவல்துறை அணியும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணிகளும் செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியில் மோதின.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரைத் தீா்மானிக்க நடைபெற்ற டை பிரேக்கரில் 4-3 என்ற கோலடித்து தமிழ்நாடு காவல்துறை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணி இரண்டாமிடத்தையும், பெங்களுரூ கனரா வங்கி அணி மூன்றாமிடத்தையும், மன்னாா்குடி விவேக் மெமோரியல் அணி நான்காம் இடத்தையும் பெற்றன.

முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் தலைவா் ஆா்.மகேந்திரன் பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்தாா். செயலா் டி.ஸ்ரீராம், பொருளாளா் டி.செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், தரணி குழுமங்களின் தலைவா் எஸ்.காமராஜ், மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் ரச.ராசேந்திரன் ஆகியோா் பரிசு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினா்.

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்

திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா். திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்த... மேலும் பார்க்க

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா். கூத்தாநல்லூரில் 2 ந... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் ட... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது

மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவ... மேலும் பார்க்க