உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
தென்னையில் நோய்த் தாக்குதல்!
கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடிபட்டி, கீழமுடிமன்னாா்கோட்டை, மேலமுடிமன்னாா்கோட்டை, அபிராமம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று பாசன முறையில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களில் பம்பு செட் மோட்டாா்கள் மூலம், கிணற்றுப் பாசன முறையில் தென்னை மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு கருகி வருகின்றன. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
எனவே, கமுதி வட்டார தோட்டக்கலைத் துறை, மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நோய்த் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.