செய்திகள் :

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

post image

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதன்கிழமை (மாா்ச் 12) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க