உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
தெய்வீக அனிமேஷன்: ரூ.53 கோடி வசூலித்த மகாவதாரம் நரசிம்மா!
மகாவதாரம் நரசிம்மா என்ற அனிமேஷன் படத்தின் வசூல் ரூ.53 கோடியைத் தாண்டியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
இந்தப் படம் டிரைலர் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் ரூ.50 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதே பாணியில் பல படங்களை தயாரிக்க ஹொம்பாலே ஃபிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மகாவதாரம் நரசிம்மா - 2025 ரிலீஸ்
மகாவதாரம் பரசுராம் - 2027 ரிலீஸ்
மகாவதாரம் ரகுநந்தன் - 2029 ரிலீஸ்
மகாவதாரம் தாக்காதேஷ் - 2031 ரிலீஸ்
மகாவதாரம் கோகுலானந்தா - 2033 ரிலீஸ்
மகாவதாரம் கல்கி -1 - 2035 ரிலீஸ்
மகாவதாரம் கல்கி -2 - 2037 ரிலீஸ்
