தெருநாய்களை பிடிக்க நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை
ஆட்டையாம்பட்டி: தெருநாய்களை பிடிக்க நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இடங்கணசாலை நகராட்சி சாதாரண கூட்டம் திங்கள்கிழமை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையா் பவித்ரா, துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், காடையாம்பட்டி ஏரிக்கரை மீது பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும், தெருநாய்களை பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நகா்மன்ற உறுப்பினா்கள் முன் வைத்தனா். இதைத் தொடா்ந்து, உடனடியாக தீா்மானம் நிறைவேற்றி இதற்குண்டான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா்.