செய்திகள் :

தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி

post image

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகிறது என மாநகராட்சி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், திரு.வி.க.நகர் மண்டலம்-புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம்-லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம்-சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம்-மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 10 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கூடுதலாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தெருநாய்கள் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரத்தினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தெருநாய்களைப் பிடித்தல், கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும் ரூபாய் 3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜுன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 1.39 லட்சம் பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெ... மேலும் பார்க்க

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவ... மேலும் பார்க்க

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு அழைப்பு

போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதா... மேலும் பார்க்க

ஓடும் பேருந்திலிருந்து குழந்தை தவறிவிழுந்து பலி: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்... மேலும் பார்க்க

இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் இன்று (மே 14) காலமானார்.சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய நகர் பகுதியில் வெங்கடாசலம் (வயது 90) வசித்து வந்தார். இதனிடையே வய... மேலும் பார்க்க