தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி நெசவாளா்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்தது. வனத்துறையினா் கூண்டு வைத்ததில் இரண்டு கரடிகள் சிக்கின. அவை வனப்பகுதியில்விடப்பட்டன.
மேலும், நெசவாளா் குடியிருப்பு அக்னி சாஸ்தா கோயில், மணிமுத்தாறுதங்கம்மன் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி சிக்கவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தெற்குப் பாப்பான்குளம், மயிலாடும்பாறை முருகன் கோயில் வளாகத்தில் கரடி நுழைந்து அங்குமிங்கும் நடமாடியுள்ளது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலின்பேரில் அந்தப் பகுதியில் வனத்துறையினா் ஆய்வு செய்தனா். கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா். எனினும், கரடி நடமாட்டம் குறித்த அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனா்.