இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சா...
தெலுங்குப் பெண்ணாக மாறிய காவ்யா அறிவுமணி!
தெலுங்குப் பெண் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பின் மூலம் நடிகை காவ்யா அறிவுமணி செய்துகாட்டியுள்ளார். இது குறித்து விடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சின்ன திரையில் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடிகையாக மாறியுள்ள காவ்யா அறிவுமணி, தொடர்ந்து திரைப்படங்களுக்கான நடிகை தேர்வுகளில் (ஆடிஷன்) பங்கேற்று வருகிறார். நடிகையாகிவிட்டதால் தன்னைத் தேடி வரும் கதைகளில் நடிக்கலாம் என்று இருந்துவிடாமல், தனக்கான கதைகளையும், பாத்திரங்களையும் தேடிச் செல்வதாக காவ்யா அறிவுமணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று அலங்கார உடை அணிந்து புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துவரும் நடிகைகளுக்கு மத்தியில், அவை ஏதுமின்றி நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையான விடியோக்களை காவ்யா அறிவுமணி பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் தெலுங்குப் பெண் எப்படி இருப்பார் என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டியுள்ளார். வீட்டில் இருக்கும் சராசரி தெலுங்குப் பெண்களைப் போன்று பாவாடை தாவணி அணிந்து, அவர்கள் செய்யும் செய்கைகளை விடியோவில் காவ்யா பதிவு செய்துள்ளார்.

பல தெலுங்குப் படங்களில் தெலுங்குப் பெண்களை காட்டும் பொதுவான பாணியில் அவர் இதனைச் செய்துள்ளார். இதற்கு முன்பு சமந்தா, காஜல் அகர்வால், சாய்பல்லவி போன்ற நடிகைகள் தெலுங்குப் படங்களில் நடிக்கும்போது இருக்கும் தோற்றத்தில் காவ்யா அறிவுமணி நடித்து காட்டியுள்ளார்.
அவரின் இந்த விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கெளரி சீரியலில் புனிதாவுக்கு மாற்றாக புதிய நடிகை!