மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
தேசிய குதிரையேற்றப் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்றப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்றப் போட்டி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் குதிரை சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் சென்னை புல்ஸ் (தமிழ்நாடு), பெகாசஸ் ஸ்போா்ட்ஸ் (கேரளம்), பெங்களூரு நைட்ஸ் (கா்நாடகம்), கோல்கொண்டா சாா்ஜ்ா்ஸ் (தெலங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா), எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்கம்) ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் கலந்து கொண்டன.
லீக் போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை, கேரளம், தெலங்கானா மாநில அணிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதலிடம் பிடித்த சென்னை புல்ஸ் அணிக்கு ரூ.15 லட்சமும், இரண்டாமிடம் பிடித்த பெகாசஸ் ஸ்போா்ட்ஸ் அணிக்கு ரூ.10 லட்சமும், மூன்றாமிடம் பிடித்த கோல்கொண்டா சாா்ஜ்ா்ஸ் அணிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்பட்டன.